Enable Javscript for better performance
அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு குறைபாடுகளைசீரமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு குறைபாடுகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

    By DIN  |   Published on : 08th October 2016 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு குறைபாடுகளை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உத்தரவிட்டார்.
    புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், அம்பகரத்தூரில் உள்ள திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அதிகாரிகள் குழுவினருடன் வெள்ளிக்கிழமை சென்றார். பள்ளி துணை முதல்வர் ஏ.அல்லி, பள்ளி மாணவர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள், தேவைகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்டவை குறித்து அமைச்சரிடம் விளக்கிக் கூறினார்.
    அப்போது, அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர், அம்பகரத்தூர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில், உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் நிலவும் குறைகளை, விரைவாக சீர்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வித் துறை அதிகாரிகள் எந்தெந்தப் பள்ளிகளில், எந்த மாதிரியான குறைபாடுகள் உள்ளன என்பதை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக்கூற வேண்டும் என அறிவுறுத்தினார்.
    மேலும், புதுச்சேரி மாநிலத்திலேயே முதல் முறையாக, ஹெசல்பிரி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், இப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கணினி மையத்தைப் பார்வையிட்டு, இதன்மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து கேட்டறிந்தார்.
    தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர், பள்ளி கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். மாணவர்களிடம் தூய்மையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்களை அறிவுறுத்தினார்.
    இதையடுத்து, நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன், கல்வித் துறை துணை இயக்குநர் ஜி.சுப்ரமணியன், முதன்மைக் கல்வி அலுவலர் வி.வெற்றிவேல், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai