Enable Javscript for better performance
ஆயுத பூஜை: ஆளுநருக்கு மனு- Dinamani

சுடச்சுட

    

    அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடக்கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் மனு அனுப்பி உள்ளது.
    அதன் துணைத் தலைவர் ம.இளங்கோ, அனுப்பியுள்ள மனு: அரசுக்குச் சொந்தமான எந்த இடத்திலும் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராக வழிபாடுகளோ, பூஜைகளோ நடத்தக்கூடாது என கடந்த 1994ஆம் ஆண்டு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    அலுவலகங்கள் வழிபாடு நடத்தக்கூடிய இடம் இல்லை என வரையறுக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை கண்டறிந்து, அவைகளை நிறைவேற்றித் தரும் இடம் தான் அலுவலகங்கள். அவை வழிபாட்டுத்தலங்கள் இல்லை. காவல் நிலையமும் அதே போன்றுள்ள இடம் தான். எனவே ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார் இளங்கோ.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai