Enable Javscript for better performance
இன்று தூய லூர்து அன்னை ஆலய பரிகார பாதயாத்திரை- Dinamani

சுடச்சுட

    

    வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலய 39-ஆவது பரிகார பாதயாத்திரை சனிக்கிழமை புதுச்சேரியில் இருந்து வில்லியனூருக்கு நடைபெறுகிறது.
    இதுதொடர்பாக பங்குத்தந்தை ரிச்சர்ட் அடிகளார் தெரிவித்துள்ளதாவது:
    கடந்த 1977ஆம் ஆண்டு புதுவை மாநிலம் முழுவதும் புயல் தாக்கும் என்றும் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் அறிவித்திருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
    அப்போதைய பேராயர், புதுவையை புயலிடம் இருந்து காப்பாற்ற வில்லியனூர் மாதாவிடம் வேண்டுமாறு மக்களிடம் தெரிவித்தார்.
    பாதிப்பில் இருந்து புதுவை காப்பாற்றப்பட்டால் அனைவரும் புதுவையில் இருந்து வில்லியனூருக்கு பாதயாத்திரை செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
    புயல் புதுவையை தாக்காமல் வேறிடத்துக்குச் சென்று விட்டது. அன்று முதல், மாதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 1977 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பேராயர் தலைமையில் பாதயாத்திரை நடந்தது.
    தொடர்ச்சியாக 39-ஆவது ஆண்டாக பாதயாத்திரை சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புனித ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில் இருந்து தொடங்குகிறது.
    பங்குத் தந்தை அல்போன்ஸ் சந்தானம் அடிகளால் யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
    மாலை 5.30 மணிக்கு வில்லியனூர் லூர்து மாதா ஆலயத்தில் தருமபுரி மாவட்ட ஆயர் டாக்டர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்புக் கூட்டு பரிகாரத் திருப்பலி நடக்கிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai