Enable Javscript for better performance
இளைஞர் மன்ற விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்ற விருதுக்கு அக். 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா சார்பில், கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2016 வரை) சிறப்பாக செயல்பட்ட இளைஞர், மகளிர் மன்றத்துக்கு மாவட்ட இளைஞர் விருது, ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மன்றம் மாநில அளவிலான விருதுக்கு பரிந்துரைக்கப்படும்.
    இதற்கான விண்ணப்பங்கள், நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்று, சேவை செய்ததற்கான உரிய ஆதாரங்களுடன், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக். 20-ஆம் தேதிக்குள் ஒப்படைக்கவேண்டும். காரைக்கால் நேரு யுவகேந்திரா, எண்.23, ஷா கார்டன் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai