Enable Javscript for better performance
கணவருடன் பைக்கில் சென்ற கர்ப்பிணியிடம் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கணவருடன் பைக்கில் சென்ற கர்ப்பிணியிடம் சங்கிலி பறிப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில், கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணியிடம் தங்கச் சங்கிலியை பறித்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    அரியாங்குப்பம் ஸ்வர்ணா நகரைச் சேர்ந்தவர் முகுந்தன் (எ) கோபி (30). லாரி ஓட்டுநர். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். வியாழக்கிழமை வில்லியனூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முகுந்தன் மனைவி ராஜேஸ்வரி, மகன் கோடீஸ்வரன் (2) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து வில்லியனூர் கொம்பாக்கம் வழியாக வீடு திரும்பினார்.
    முருங்கப்பாக்கம் காலனி அருகில் வந்தபோது, பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ராஜேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். இதனால் ராஜேஸ்வரிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.
    இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai