Enable Javscript for better performance
கதர் கிராமத் தொழில் வாரிய தீபாவளி தள்ளுபடி விற்பனை: அமைச்சர் தொடங்கி வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    கதர் கிராமத் தொழில் வாரிய தீபாவளி தள்ளுபடி விற்பனை: அமைச்சர் தொடங்கி வைத்தார்

    By DIN  |   Published on : 08th October 2016 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொழில் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
    கதர்கிராமத் தொழில் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், கதர் பயன்படுத்துவோர் பயன் பெறும் வகையில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
    இதற்கான விழா காமராஜர் சாலையில் உள்ள காதி கிராப்ட் விற்பனையகத்தில் நடைபெற்றது. தொழில் துறை அமைச்சர் ஷாஜஹான் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
    அரசுச் செயலர் அருண் தேசாய் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு விற்பனை வரும் 28-ம் தேதி வரை நடைபெறும். தமிழகம், ஆந்திரம், கேரளம், பிகார், மேற்கு வங்கம், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், புதுச்சேரி மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தூய கதர் பட்டு ரகங்கள், பட்டு ரகங்கள், கிராமத் தொழில் பொருள்கள் அனைத்துப் பண்டிகை நாள்களிலும், தேசியத் தலைவர்களது பிறந்த நாள்களிலும் கீழ்க்காணும் தள்ளுபடியுடன் விற்கப்படும். கதர், பாப்டா, கம்பளி, பாலிவஸ்திரா, ரகங்களுக்கு 40 சதவீதம், பட்டு ரகங்களுக்கு 20 சதவீதம், கிராமத்தொழில் பொருள்களுக்கு 15 சதவீதம் தளளுபடி வழங்கப்படுகிறது.
    சாதாரண நாள்களில் அனைத்து ரகங்களுக்கும் அரசின் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு 10 மாத சுலப தவணை கடன் வசதி உண்டு
    காமராஜ் சாலை, புது சாரம், எஸ்.வி.பட்டேல் சாலை, புதுச்சேரி, பெருமாள் கோயில் வீதி, வில்லியனூர், மேற்கு வீதி பாகூர், சர்ச் வீதி, காரைக்கால், பிரதான சாலை, திருநள்ளார், காரைக்கால், புதிய பேருந்து பஸ் நிலையம், ஏனாம், புனித தெரசா சர்ச், மாஹே பகுதிகளில் உள்ள விற்பனையகங்களில் தள்ளுபடி விற்பனை நடைபெறும். கதர்கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் ஜி.கணேசன், செயல் அதிகாரிகள் பி.சேக்கிழார், பி.பக்தவத்சலம் உள்பட பலர் பங்கேற்றனர்.
    நடப்பாண்டுக்கு ரூ.3.5 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai