Enable Javscript for better performance
கம்யூ. பிரமுகர் பைக்கில் ரூ. 4 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகரின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    புதுவை அரியாங்குப்பம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் அபிஷேகம் (65). இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகரான இவர், ஏஎப்டி அனைத்து தொழிற்சங்க கூட்டு போராட்டக்குழுத் தலைவராகவும் உள்ளார். இவர், மனைவியுடன் ரோமன் ரோலன்ட் வீதியில் உள்ள ஸ்டேட் வங்கிக்குச் சென்று ரூ. 4 லட்சம் பணத்தை வியாழக்கிழமை எடுத்துள்ளார். பணத்தை இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துவிட்டு, சாரம் நோக்கி சென்றார். பின்னர், சாரம் சக்தி நகர் அருகிலுள்ள பதிவாளர் அலுவலகம் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு, எதிர்புறம் இருவரும் நின்றுள்ளனர்.
    அப்போது நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியவாறே அபிஷேகம் சற்று நகர்ந்துள்ளார். அந்த நேரத்தில் சரக்கு வாகனம் ஒன்று அபிஷேகத்தின் வாகனத்தை மறைக்கும் வகையில் நின்றுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட 2 மர்மநபர்கள், இருசக்கர வாகனப் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்த புகாரில் உருளையன்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai