Enable Javscript for better performance
குடும்ப அட்டை வழங்குவதில் குளறுபடியை களைய வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    குடும்ப அட்டை வழங்குவதில் குளறுபடியை களைய வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 08th October 2016 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடும்ப அட்டையில் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ ஆனந்து வலியுறுத்தியுள்ளார்.
    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட குடும்ப அட்டையில் நிறைய குளறுபடிகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களின் பெயர், தலைவர் பெயர், வயது உள்ளிட்டவைகளில் எழுத்துப் பிழை போன்ற எண்ணற்ற தவறுகள் உள்ளன.
    குளறுபடிகளை சரி செய்யாமல் உள்ள நிலையில், ஸ்மார்ட் கார்டு பயன்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, குடும்ப அட்டையில் உள்ள குளறுபடிகளை களைய சமூக நலத்துறை அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai