Enable Javscript for better performance
சிறந்த படைப்பாளி குழந்தை விருதுக்கான போட்டிகள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சிறந்த படைப்பாளி குழந்தை விருதுக்கான போட்டிகள் அறிவிப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில சிறந்த படைப்பாளிக் குழந்தை விருதுகளுக்கான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    இதுதொடர்பாக கல்வித் துறை இயக்குநர் ல.குமார் வெளியிட்ட அறிக்கை:
    படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு புதுச்சேரி அரசின் ஜவஹர் இல்லம் மாநில சிறந்த படைப்பாளிக் குழந்தை விருதுகளை ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகள் மூலம் அளித்து வருகிறது.
    இவ்விருதுக்கான சிறந்த குழந்தைகளை தேர்வு செய்ய கொம்யூன், நகராட்சி அளவிலான போட்டிகளில் கீழ்க்காணும் இடங்களில் வரும் 18ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறும்.
    கொம்யூன்: பாகூர் அரியாங்குப்பம்: அரசு உயர்நிலைப் பள்ளி, அரியாங்குப்பம்.
    மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூர்: அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி, வில்லியனூர்.
    நகராட்சிகள்: உழவர்கரை நகராட்சி: சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளி, தட்டாஞ்சாவடி. புதுச்சேரி நகராட்சி: சவரிராயலு நாயகர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, நீடராஜப்பையர் வீதி, புதுச்சேரி. இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கான மாநில அளவிலான போட்டிகள் ஜவஹர் சிறுவர் இல்லத்தில் வரும் 25, 26 தேதிகளில் நடைபெறும். 9 முதல் 16 வயதுள்ள மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் படைப்பாற்றல், நிகழ்கலை, படைப்பாற்றல் கலை, படைப்பாற்றல் எழுத்து, மற்றும் அறிவியல் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் பங்கேற்கலாம்.
    போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நுழைவுப்படிவம் அந்தந்த பள்ளிகளில் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பள்ளித் தலைமையின் கையொப்பத்துடன் புதுவை ஜவஹர் இல்லத்தில் சேர்க்க வேண்டிய கடைசி நாள் 14.10.16 மாலை 5 மணி ஆகும். மேலும் விவரங்களுக்கு 0413-2225751 என்ற எண்ணிலும் ட்ற்ற்ல்:ள்ஸ்ரீட்ர்ர்ப்ங்க்ய்.ல்ன்க்ன்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ்.ஞ்ர்ஸ்.ண்ய் -என்ற இணையதள முகவரியிலும் அணுகலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai