Enable Javscript for better performance
சிறையில் கைதி உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, புதுவை காலாப்பட்டு சிறையில், கைதி மர்டர் மணிகண்டன் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
    புதுவையில் உள்ள தொழிலதிபரை மணிகண்டனின் கூட்டாளிகள் மிரட்டி பணம் கேட்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மணிகண்டன் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
    இந்த நிலையில், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மணிகண்டன் சிறையில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தார். சிறை அதிகாரிகள் வலியுறுத்தியும் காலை, மதியம் ஆகிய இரு வேளையும் மணிகண்டன் உணவு சாப்பிடவில்லை.
    நீதிமன்றத்தில் ஆஜர்: முன்னதாக, பிற வழக்குகள் தொடர்பாக மணிகண்டனை போலீஸார் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக இருந்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் வந்து அவரது உடல்நிலையை பரிசோதித்தனர். இதில் முழு உடல் தகுதியுடன் அவர் இருந்ததால் நீதிமன்றத்தில் மணிகண்டனை போலீஸார் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai