Enable Javscript for better performance
சுய உதவிக் குழுவினருக்கு கூட்டுறவு சங்கம் கடனுதவி- Dinamani

சுடச்சுட

    

    அரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினரைச் சேர்ந்த 65 பேருக்கு ரூ.19.5 லட்சம் கடனுதவியை கூட்டுறவு அமைச்சர் மு.கந்தசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
    கூட்டுறவு சங்கத்தில் புதிதாக 4 சுய உதவிக் குழுக்கள் இணைக்கப்பட்டன. குழு உறுப்பினர்கள் பொருளாதார ரீதியில் மேம்பாடு அடையும் வகையில், தலா ரூ.30 ஆயிரம் என மொத்தம் ரூ.19.5 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
    மங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்வி.சுகுமாறன், திருபுவனை எம்.எல்.ஏ. கோபிகா முன்னிலை வகித்தனர். அமைச்சர் கந்தசாமி கடனுதவியை வழங்கினார்.
    கூட்டுறவுப் பதிவாளர் ஏஎஸ்.சிவக்குமார், நிர்வாக அதிகாரி டி.வடிவேலு, சரக உதவி மேலாளர் ராமமூர்த்தி, மேலாளர் கே.சதாசிவம் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai