Enable Javscript for better performance
ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் சங்கத்தினர், வெள்ளிக்கிழமை நிர்வாக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
    ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊழியர்கள் பணிக்கட்டமைப்பை உடனே சீரமைக்க வேண்டும், அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வுகளை உடனே மேற்கொள்ள வேண்டும், எம்ஆர்சி, ஓ.டி. பதவிகளை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் எஸ்.தட்சிமாமூர்த்தி தலைமை தாங்கினார்.
    பொதுச் செயலர் கே.ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். செயலர் பெர்தின் அன்த்துவான், மாசிலாமணி, எஸ்.வேலு சிறப்புரை ஆற்றினர். பொருளர் ஆர்.தமிழ்வாணன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai