Enable Javscript for better performance
தூத்துக்குடி விவசாயிகளுக்கு காரைக்காலில் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் அண்மையில் பயிற்சியளிக்கப்பட்டது.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம், விளாத்திக்குளம், கருங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆத்மா வேளாண் குழுவினர் 47 பேர், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு வேளாண் அறிவியல் நிலையத்துக்கு ஒரு நாள் கண்டுணர்வு சுற்றுலாவாக அண்மையில் வந்தனர்.
    அவர்களுக்கு, நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ஜெ.செந்தில்குமார், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய செயல்பாடுகள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்து விளக்கிக் கூறினார். மீன்வள உதவி ஆய்வாளர் ஜெ.முருகேசன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், துறைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினர்.
    மேலும், வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள நெல் சாகுபடி, காய்கறி சாகுபடி, மீன் வளர்ப்பு, மண் புழு உரம் தயாரிப்பு, முயல், காளான் வளர்க்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai