Enable Javscript for better performance
நூலகத்தை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் : அமைச்சர் அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    நூலகத்தை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் : அமைச்சர் அறிவுரை

    By DIN  |   Published on : 08th October 2016 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நூலகம் சென்று புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
    இலங்கை தமிழ் அறிஞரும், யாழ்நூல் ஆசிரியருமான விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தொடக்க விழா மற்றும் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த்துறை பேராசிரியர் இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் நூல் மற்றும் திருக்குறள் விளக்க உரை நூல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து தலைமை தாங்கினார். கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் பங்கேற்று, விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்படத்தை தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மாணவர்கள் பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி நூலகங்களுக்குச் சென்று பல்வேறு அறிவு சார் புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். நூல்களை பேரவை துணைத் தலைவர் விபி. சிவக்கொழுந்து வெளியிட்டார்.
    கனடாவைச் சேர்ந்த சிவம் வேலுப்பிள்ளை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
    ஆய்வறிஞர் கு.சிவமணி, புதுவைப் பல்கலை. பேராசிரியர் க.இளமதி சானகிராமன், சென்னைப் பல்கலை. பேராசிரியர் ஒப்பிலா. மதிவாணன், அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியர் அரங்க பாரி, வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி பேராசிரியர் ப.சிவராஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் அரங்க.மு. முருகையன் வரவேற்றார். மு.இளங்கோவன் ஏற்புரை ஆற்றினார். பேராசிரியர் உரு. அசோகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் உள்பட பலர் கலந்து
    கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai