Enable Javscript for better performance
பாகூரில் ரூ.52 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ரூ.52 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி தொடங்கி வைத்தார்.
    பாகூர் அரங்கனூர் கிராமம் பாலாஜி நகரில் ரூ.13.71 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைத்தல், சேலியமேடு காலனியில் விடுபட்ட பகுதிக்கு ரூ.8.61 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைத்தல், கிருமாம்பாக்கம் நாடர்ன் பள்ளி சாலையில் ரூ.11.82 லட்சம் செலவில் தார் சாலை அமைத்தல், கிருமாம்பாக்கம் கிராமத்தில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் ரூ.4.97 லட்சம் செலவில் கருங்கல் சாலை அமைத்தல், கந்தன்பேட் உட்புற சாலைக்கு ரூ.12.86 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைத்தல் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தொகுதி எம்.எல்.ஏ.வும், சமூக நலத் துறை அமைச்சருமான கந்தசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் செளந்திரராஜன், உதவிப் பொறியாளர் தமிழரசன், பொறியாளர்கள் மாணிக்கசாமி, சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai