Enable Javscript for better performance
புதுவை பல்கலை. பேராசிரியருக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    2016-ஆம் ஆண்டுக்கான ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருதுக்கு புதுவைப் பல்கலை. தமிழியற்புல பேராசிரியர் அ.அறிவுநம்பி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் செட்டிநாட்டு அரசர் ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார். தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் அரிய பணிகளைச் செய்தவர்களுக்கு அவர் பெயரிலான விருதை ஆண்டுதோறும் எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளை வழங்கி வருகிறது.
    அதன்படி நிகழாண்டு 2016-க்குரிய சிறந்த தமிழறிஞராகப் புதுவைப் பல்கலை. தமிழியற்புலப் பேராசிரியர் அ.அறிவுநம்பி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரூ.2 லட்சம் ரொக்கம், விருது வழங்கப்படுகிறது.
    இதற்கான விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருட்டிணகாந்தி இவ்விருதை வழங்குகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai