Enable Javscript for better performance
மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டணி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டணி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராத மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், மக்கள் நலக் கூட்டணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த சோ.அம்பலவாணன், அரசு.வணங்காமுடி, என்.எம்.கலியபெருமாள், தமிழழகன் உள்ளிட்ட பல்வேறு நிலை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவைக் கைவிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். கர்நாடக அரசு மற்றும் அந்த மாநில பாஜகவினர் மத்திய அரசுக்கு எந்தெந்த வகையில் அழுத்தம் கொடுத்தார்களோ அதுபோன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    பழங்குடி மக்களுக்கான மனித உரிமைக் கருத்தரங்கம்

    புதுச்சேரி மாநில பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு, அகில பாரத ஆதிவாசி விகாஸ் பரிஷத் சார்பில் மனித உரிமை விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை டிஎன் பாளையம் இருளர் குடியிருப்பில் நடைபெற்றது.
    கூட்டமைப்புத் தலைவர் கே.ராம்குமார், பரிஷத் தலைவர் சோம்ஜிபாய் தாமர் தலைமை தாங்கினர். மண்டல தலைவர் கே.கேசவன், செயற்குழு உறுப்பினர் டி.மதிவாணன், டி.பாபுசந்தானம் பங்கேற்றனர். பழங்குடியின மக்களின் அங்கீகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டமைப்பு துணைத் தலைவர் இ.சக்திவேல் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai