Enable Javscript for better performance
மாநில தேக்வாண்டோ போட்டி: புதுவையில் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டிகள் 8, 9 (சனி, ஞாயிறு) ஆகிய 2 நாள்கள் உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டரங்கில் நடைபெறுகின்றன.
    சூப்பர் கிட்ஸ், கிட்ஸ், சப் ஜூனியர் கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் ஸ்பேரிங் மற்றும் பூம்சே போட்டிகள் 100 பிரிவுகளில் நடக்கின்றன. போட்டிகள் தொடக்க விழா சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்கிறது. சங்க நிறுவனச் செயலர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.
    துணை நிலை ஆளுநர் கிரண்பேடி போட்டிகளை தொடங்கி வைக்கிறார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிறைவு விழாவில் முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொண்டு பரிசளிக்கின்றனர். புதுவையின் 4 பிராந்தியங்களையும் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai