Enable Javscript for better performance
மின் கம்பங்களில் அடுத்தடுத்து மோதிய கேஸ் சிலிண்டர் லாரி: பெரும் விபத்து தவிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    மின் கம்பங்களில் அடுத்தடுத்து மோதிய கேஸ் சிலிண்டர் லாரி: பெரும் விபத்து தவிர்ப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    , எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, மின்கம்பங்களில் அடுத்தடுத்து மோதியது. அதிகாலை நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் இருந்து எரிவாயு நிரப்பப்பட்ட சுமார் 300 உருளைகளை ஏற்றிக் கொண்டு லாரி, சிதம்பரம் நோக்கி வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. லாரியை கடலூரைச் சேர்ந்த ஓட்டுநர் செல்வகுமார் (31) என்பவர் ஓட்டினார்.
    புதுச்சேரி-கடலூர் சாலையில் நைனார்மண்டபம் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, சாலையோரம் இருந்த மின்கம்பங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
    இதில் ஒரு மின்கம்பம் உடைந்து விழுந்தது. மற்றொரு மின்கம்பத்தில் லாரி மோதியபடி நின்றது. அதிகாலை நேரம் என்பதால் அந்த வழியாக யாரும் செல்லவில்லை. இதன் காரணமாக, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    இந்த விபத்தில் அருகில் டீக்கடை அருகில் நிறுத்தப்பட்டிருந்த 4 மிதிவண்டிகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள் உடைந்ததால் முருங்கப்பாக்கம், நைனார்மண்டபம் பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது.
    சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் புதுச்சேரி போக்குவரத்து போலீஸார், மின் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
    புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் ஒரு வண்டியில் விரைந்து வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    மரப்பாலம் மின் துறை அதிகாரிகள், ஊழியர்கள் வந்து மின் இணைப்பை முற்றிலும் துண்டித்தனர். போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்த தாமதமானதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai