Enable Javscript for better performance
மூதாட்டிக்கு குடும்ப அட்டை: ஆட்சியருக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    70 வயது மூதாட்டிக்கு புதிதாக குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபனுக்கு மனிதநேய மக்கள் கட்சியினர் பாராட்டு தெரிவித்தனர்.
    காரைக்கால் நூல்கடை வீதியைச் சேர்ந்தவர் ஜெகபர் நாச்சியார் (70). தனியாக வசித்துவரும் இவர், குடும்ப அட்டை கேட்டு கடந்த 17 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்ததாக கூறப்படுகிறது.
    இந்த நிலையில், காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் அ.ராஜாமுகம்மது உதவியுடன் மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபனை சந்தித்து, குடும்ப அட்டை கேட்டு அண்மையில் கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலித்த ஆட்சியர், மூதாட்டி ஜெகபர் நாச்சியாருக்கு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி, காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் மூதாட்டிக்கு புதிய குடும்ப அட்டை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராஜாமுஹம்மது உள்ளிட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai