Enable Javscript for better performance
10 கிராமங்களில் பூர்ணசக்தி கேந்திரா திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மாநிலத்தில் 10 கிராமங்களில் பூர்ணசக்தி கேந்திரா திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
    மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான பூர்ணசக்தி கேந்திரா என்ற தேசிய இயக்கம் கடந்த 2011-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    இத்திட்டத்தை புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி மாநில மகளிர் வளமையத்துடன் இணைந்து அரியாங்குப்பம் வட்டாரத்தில் செயல்படுத்துவதற்காக, சோரியாங்குப்பம், பாகூர் மேற்கு, சேலியமேடு, குடியிருப்பு பாளையம், கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், புதுக்குப்பம், ஏம்பலம், செம்பியாபாளையம், கரிக்கலாம்பாக்கம் ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கான கல்வி, அரசியல், சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.
    மேலும், குடும்பத்திலும் சமுதாயத்திலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், அதற்கான காரணங்களை கண்டறிந்து தகுந்த ஆலோசனைகளை வழங்கவும், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் வழங்கும் பெண்கள் சார்ந்த அனைத்து நலத்திட்டங்களும் பெண்களை சென்றடைகிறதா என்பதை கண்டறியவும், சட்ட ரீதியான உரிமைகளை பெண்களுக்கு கிடைக்கச் செய்து பெண்களை நாட்டின் முழு சக்தியாக உருவாக்குவதும் இத்திட்டத்தின் அங்கமாகும்.
    இத்திட்டத்தின் தொடக்க விழா மற்றும் கிராம பஞ்சாயத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பம் மற்றும் தனி நபர் பெண்ணின் விவரங்களை சேமிப்பதற்கான படிவங்களை கிராம ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நலத் துறை அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு கிராம ஒருங்கிணைப்பாளர்களிடம் புள்ளிவிவரப் படிவத்தை வழங்கி தொடங்கி வைத்தார். பாகூர் எம்.எல்.ஏ, தனவேலு, மகளிர் மேம்பாட்டுத் துறை இயக்குநர் மீனாகுமாரி வாழ்த்திப்பேசினர்.
    துணை இயக்குநர் சாந்தி வரவேற்றார். பாகூர், நெட்டப்பாக்கம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், அரியாங்குப்பம் வட்டார மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர். உதவி இயக்குநர் ஜி.மாலதி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai