Enable Javscript for better performance
அக். 20இல் ஆர்ப்பாட்டம்: அரசு ஊழியர் சங்க சம்மேளனம் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    அக். 20இல் ஆர்ப்பாட்டம்: அரசு ஊழியர் சங்க சம்மேளனம் முடிவு

    By புதுச்சேரி,  |   Published on : 15th October 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையில் ஊழியர்களுக்கு எதிராக உள்ளவற்றை மாற்றி அமைக்கக் கோரி வருகிற 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
     அதன் பொதுச்செயலர் எம்.பிரேமதாசன் வெளியிட்ட அறிக்கை: ஊதியக்குழுவின் பாதகமான பரிந்துரைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்பட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும், அதைக் கொண்டு ஊதிய விகிதங்களை மாற்றுவது போன்றவற்றை பரிசீலிக்கக் குழு அமைக்காததைக் கண்டித்தும், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மூன்று கட்டப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
     அதன்படி 20ஆம் தேதி மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 7.11.16 அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தலைமை தபால் நிலையம் முன் தர்னா போராட்டம், நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் அரசுத் துறை, உள்ளாட்சி, தன்னாட்சி, கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளி ஊழியர்கள் என அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் பிரேமதாசன்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai