Enable Javscript for better performance
அம்பேத்கர் மணிமண்டபம் விரிவாக்கம் செய்யப்படும்: அமைச்சர் கந்தசாமி தகவல்- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கர் மணிமண்டபம் விரிவாக்கம் செய்யப்படும்: அமைச்சர் கந்தசாமி தகவல்

    By புதுச்சேரி,  |   Published on : 15th October 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாள் நிறைவு விழாவையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள அவரது மணிமண்டபத்தை விரிவாக்கம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
     புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். அங்குள்ள அம்பேத்கர் சிலை, புகைப்படம், நூலகம், ஊழியர்களின் வருகைப் பதிவு ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது அரசுச் செயலர் மிகிர் வரதன், செயற்பொறியாளர் ராமதாஸ், பாட்கோ பொதுமேலாளர் சதாசிவம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
     பின்னர் அமைச்சர் கந்தசாமி அளித்த பேட்டி: அம்பேத்கரின் 125-ஆவது பிறந்தநாளின் நிறைவு விழாவை சிறப்பாக நடத்த மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வருகிற திங்கள்கிழமை (17-ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில், அமைச்சர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
     எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் இக் கூட்டத்தில் விழாவை எந்தத் தொகுதியில் கொண்டாடுவது என்ற முடிவு எடுக்கப்படும்.
     இந்த நிறைவு விழா அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கி அவரது பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி வரை கொண்டாடப்படும். அவரது வாழ்க்கை வரலாறு நிகழ்ச்சிகள் கிராமம் தோறும் நடத்தப்படும். மணிமண்டபத்திலும் அவரது வாழ்க்கை வரலாறு நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் நடைபெறும். மணிமண்டபத்தை விரைவில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai