Enable Javscript for better performance
ஆக்கிரமிப்பில் சிக்கிய கோயில் நிலங்களை மீட்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஆக்கிரமிப்பில் சிக்கிய கோயில் நிலங்களை மீட்கக் கோரிக்கை

    By புதுச்சேரி,  |   Published on : 15th October 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரியுள்ளது.
     இதுதொடர்பாக அதன் மாநிலத் தலைவர் கி.மஞ்சினி வெளியிட்ட அறிக்கை:
     ஆனைமுருகன் கோயிலுக்கு அருகில் உள்ள சாலையோரப் பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. அருகிலேயே எம்.எல்.ஏ. அலுவலகம் இருந்தும், இது கண்டுகொள்ளப்படாதது கண்டனத்துக்குரியது.
     எனவே, அப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு பொதுக்கழிப்பிடம் கட்டித்தருவதுடன் கோயில் பகுதியை தூய்மையாக பராமரிக்க முன்வர வேண்டும். மேலும், கருவடிக்குப்பம் கருமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்து தொழில் நடத்தி வருகிறார். எனவே, புதுவை மாநிலத்தில் உள்ள இது போல ஆக்கிரமிப்பு செய்துள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai