Enable Javscript for better performance
இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்: நமச்சிவாயம்- Dinamani

சுடச்சுட

    

    இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்: நமச்சிவாயம்

    By புதுச்சேரி,  |   Published on : 15th October 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று அமைச்சரும் புதுவை காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் தெரிவித்தார்.
     முதல்வர் நாராயணசாமி போட்டியிட உள்ள நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தலை இன்னும் ஓரிரு நாள்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     இந்த நிலையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதுவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை வகித்தார். முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் திமுக அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார், நாஜிம் உள்ளிட்ட இரு கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது, தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
     இதன் பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது: நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அதற்கான வியூகங்களை அமைத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 4 மாதங்களாக பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. எனவே தேர்தலில் அமோகமான வெற்றியைப் பெறுவோம் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai