Enable Javscript for better performance
இறந்தவரின் தோலை எடுத்து தோல்மாற்று அறுவைச் சிகிச்சை: ஜிப்மர் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    இறந்தவரின் தோலை எடுத்து தோல்மாற்று அறுவைச் சிகிச்சை: ஜிப்மர் சாதனை

    By  புதுச்சேரி,  |   Published on : 15th October 2016 11:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jipmer

    நாட்டிலேயே அரசு மருத்துவமனைகளில் முதல்முறையாக ஜிப்மரில், இறந்த வரின் உடலில் இருந்து தோலை எடுத்து தோல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
     இது நாட்டிலேயே அரசு மருத்துவமனைகளில் நடந்த முதல் தோல் மாற்று அறுவைச் சிகிச்சை ஆகும். மூளைச்சாவு அடைந்த நபரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோல் தீக்காயமடைந்த ஒரு நோயாளிக்கும் மற்றும் நீண்டநாள்களாக ஆறாத புண் கொண்ட மற்றொரு நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.
     இந்த தோல் மாற்று அறுவைச் சிகிச்சை டாக்டர் ரவிக்குமார் சிட்டோரியா தலைமையில் நடைபெற்றது.
     இதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் டாக்டர் எஸ்.சி.பரிஜா கூறியதாவது: ஜிப்மர் மருத்துவமனைக்கு தோல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான அங்கீகாரத்தை மத்திய அரசு அண்மையில் அளித்தது.
     பல நோயாளிகள் சாலை விபத்து, தீக்காயம், புற்றுநோய் மற்றும் அறுவைச் சிகிச்சைகள் ஆகியவற்றால் தோல், எலும்புகள், திசுக்கள், விரல்கள், கை, கால்கள்,காது, மூக்கு போன்ற இன்றியமையாத உடலுறுப்புகளை இழந்து விடுகின்றனர்.
     இவர்களுக்கு இறந்த நபர்களின் உடல்களிலிருந்து தகுதியான உடல் உறுப்புகளை எடுத்து பொருத்த முடியும் என்றார்.
     டாக்டர் ரவிக்குமார் சிட்டோரியா கூறியது: மத்திய அரசு ஒரு நோயாளி மூளைச்சாவு அடைந்தார் என்பதற்கான சான்றிதழை தருவதற்கான அங்கீகாரத்தை ஜிப்மருக்கு அளித்துள்ளது. இந்த நோயாளிகளிடமிருந்து திசுக்கள் மற்றும் உடலுறுப்புகள் பெற முடியும். இந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் பல தரப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் உப மருத்துவ நிபுணர் குழுக்கள் ஈடுபட்டன என்றார் சிட்டோரியா.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai