Enable Javscript for better performance
காவிரி நீர் விவகாரம்: ரயில் மறியல்: 50 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி நீர் விவகாரம்: ரயில் மறியல்: 50 பேர் கைது

    By புதுச்சேரி.  |   Published on : 15th October 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி நீர் விவகாரத்தில் தமிழகம்-புதுவைக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகக் கூறி, ரயில் மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
     காவிரி நீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சுல்தான்பேட்டை ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
     அப்போது, அங்கு புதுவையில் இருந்து சென்னைக்கு சென்ற விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் அப்துல்லா தலைமை தாங்கினார்.
     மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai