Enable Javscript for better performance
குடும்ப அட்டைகளுக்கு நவ.5 வரை இலவச சர்க்கரை- Dinamani

சுடச்சுட

    

    குடும்ப அட்டைகளுக்கு நவ.5 வரை இலவச சர்க்கரை

    By புதுச்சேரி,  |   Published on : 15th October 2016 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் 2 கிலோ இலவச சர்க்கரை வரும் நவம்பர் 5-ம் தேதி வரை வழங்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் பி.பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
     அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு புதுவை அரசால் அனைத்து குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக நியாய விலைக்
     கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
     இந்த இலவச சர்க்கரையை வரும் நவம்பர் 5ஆம் தேதி வரை வழங்குமாறு நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான பி பதிவேடு நவம்பர் 10ஆம் தேதிக்குள் இந்த அலுவலகத்தில் தவறாமல் சமர்பிக்கப்பட வேண்டும்.
     இந்த தகவல் அனைத்தையும் பொதுமக்கள் அறியும்படி தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் பிரியதர்ஷினி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai