Enable Javscript for better performance
ஜிப்மரில் ஆசிய, மேற்கு பசிபிக் நெறிமுறை மதிப்பாய்வுரைக் குழு ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஜிப்மரில் ஆசிய, மேற்கு பசிபிக் நெறிமுறை மதிப்பாய்வுரைக் குழு ஆய்வு

    By புதுச்சேரி,  |   Published on : 15th October 2016 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜிப்மர் மருத்துவமனை ஆராய்ச்சிகள் தொடர்பாக ஆசிய, மேற்கு பசிபிக் நெறிமுறை மதிப்பாய்வுரை குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
    ஜிப்மர் மருத்துவமனை மருத்துவச் சிகிச்சை மற்றும் மருத்துவ கல்வியில் நாட்டில் சிறந்த நிறுவனமாக விளங்குகிறது. இதற்கு இணையாக மருத்துவ ஆராய்ச்சியிலும் குறிப்பிடும்படியான வளர்ச்சியையும் அடைந்துள்ளது.
    ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சிகளில் நெறிமுறை மதிப்பாய்வுரையை வலுப்படுத்தும் நோக்கில் ஆசிய மற்றும் மேற்கு பசிபிக் கண்டத்தின் நெறிமுறை மதிப்பாய்வுரைக் குழு இயக்குநர் பரிஜா அழைப்பின் பேரில் வருகை தந்தது.
    இந்தக் குழுவில் தாய்லாந்தைச் சார்ந்த ஆர்தர் நவரோ, இலங்கை கெலனியா பல்கலை.யைச் சார்ந்த டாக்டர் பக்னேஸ்வரன், மும்பை புளு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அப்ரிடி மற்றும் மும்பை தேசிய இனக்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் லலிதா சவேர்தக்கர் ஆகியோர் கொண்ட குழு ஜிப்மரின் மனித மருத்துவ ஆராய்ச்சியின் நெறிமுறைக்குழுவின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை தணிக்கை செய்தது. அதன் அடிப்படையில் பல்வேறு பரிந்துரைகள் தரப்பட்டன ஜிப்மர் சார்பில் ஆராய்ச்சி முதல்வர் டாக்டர் விஷ்ணுபட், ஆராய்ச்சி பேராசிரியர் டாக்டர் தாப்பா, நெறிமுறைக் குழுவின் செயலாளர் டாக்டர் காதம்பரி ஆகியோர் பங்கு பெற்றனர்.
    Startegic Initiative for Developing Capacity in Ethical Review Survery எனப்படும் இந்த தணிக்கை மற்றும் கணக்கெடுப்பு ஜிப்மர் ஆராய்ச்சியில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது, ஜிப்மர் நெறிமுறை மதிப்பாய்வுரைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைப்பதற்கு வழிவகுக்கும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai