Enable Javscript for better performance
திருபுவனையில் ஆஞ்சநேயர் சிலை அகற்றம்: பொதுமக்கள்-போலீஸார் தள்ளுமுள்ளு- Dinamani

சுடச்சுட

    

    திருபுவனையில் ஆஞ்சநேயர் சிலை அகற்றம்: பொதுமக்கள்-போலீஸார் தள்ளுமுள்ளு

    By புதுச்சேரி,  |   Published on : 15th October 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அருகே திருபுவனையில் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக ஆஞ்சநேயர் சிலையை அகற்ற முயன்றபோது பொதுமக்கள்-போலீஸார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
     திருபுவனை பெரியபேட் பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் அப்பகுதி மக்கள் ஆஞ்சநேயர் சிலை வைத்து வழிபட்டு வந்தனர். இந்த சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் வருவாய்த் துறையினர் அறிவுறுத்தி வந்தனர்.
     எனினும் சிலை அகற்றப்படவில்லை. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் காவல் துறையினரின் துணையுடன் அந்த சிலையை அப்புறப்படுத்த முயன்றனர்.
     இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. எனினும், சிலை அப்புறப்படுத்தப்பட்டது.
     இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai