Enable Javscript for better performance
நாராயணசாமியை தோற்கடிக்க பாஜக இளைஞர் அணி தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    நாராயணசாமியை தோற்கடிக்க பாஜக இளைஞர் அணி தீர்மானம்

    By புதுச்சேரி,  |   Published on : 15th October 2016 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமியை தோற்கடிக்க பணியாற்றப் போவதாக பாஜக இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
     புதுவை பாஜக கட்சியின் இளைஞர் அணி செயற்குழு கூட்டம், புதுவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், பொதுச் செயலர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், இளைஞர் அணி தலைவர் விஜய சைலேந்தர், பொறுப்பாளர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     2.40 லட்சம் படித்த இளைஞர்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் வேலை இல்லாத நிலையில், நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடவுள்ள நாராயணசாமியை தோற்கடிக்க பணியாற்ற வேண்டும், புதுவை அரசு பொது மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் உறவினர்கள் தங்குவதற்கு இரவு விடுதி கட்டவும், கோரிமேடு சுங்கச்சாவடியை தமிழகப் பகுதியான கிளியனூருக்கு மாற்ற வேண்டும்,
     முத்தியால்பேட்டை சோலை நகரில் பழுதடைந்துள்ள சமூகநலக் கூடம், இளைஞர் தங்கும் விடுதியை புதுப்பிப்பது, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான நூல்களை ரோமன் ரோலன்ட் நூலகத்துக்கு வாங்க வேண்டும், விவேகானந்தர், கலாம் சிலைகளை புதுவையில் நிறுவவும், கடல்சார் கல்வி நிலையம் அமைக்க வேண்டும், தெரு விளக்குகளை சூரியஒளி மூலம் இயங்கும் விளக்குகளாக மாற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai