Enable Javscript for better performance
நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கோரிக்கை

    By புதுச்சேரி,  |   Published on : 15th October 2016 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பதவி விலகிய முன்னாள் எம்.எல்.ஏ.வின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக வருமானவரித் துறையின் விரிவான விசாரணைக்குப் பிறகே, நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.
     இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
     காவிரி நீர் பிரச்னையில் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசும், மத்திய பாஜக அரசும் துரோகம் இழைத்து வருகின்றன. காவிரில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிட, சோனியா காந்தியை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்த வேண்டும். காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக்குழு தமிழகம் வந்தபோது காரைக்கால் வர எந்தவித முயற்சியையும் நாராயணசாமி எடுக்கவில்லை. இதற்காக அவர் காரைக்கால் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
     பெருகி வரும் வெடிகுண்டு கலாசாரம்: முன்னாள் அமைச்சர் ராஜவேலுவின் உறவினர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில், அதிமுக பிரமுகர் வீட்டுக்கு வீச வந்தபோது மாறி வீசப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவலை காவல் துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் வெடிகுண்டு கலாசாரம் பெருகி வருகிறது.
     குற்றவாளிகளுடன் காவல் துறையினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதால் மக்கள் பீதியுடன் வாழ வேண்டிய நிலை உருவாகி உள்ளது. நெல்லித்தோப்புத் தொகுதியில் தேர்தலுக்காக நலத் திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் பிற தொகுதிகள் புறக்கணிப்புக்கு ஆளாகி உள்ளன.
     முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் குமார் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக வருமானவரித் துறையினரின் விரிவான விசாரணைக்குப் பிறகுதான் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். பாப்ஸ்கோ, பிஆர்டிசி முறைகேடுகள் தொடர்பாக அரசு விசாரணைக் குழுக்களை அமைத்துள்ளது கண்துடைப்பு நாடகம் என்றார் அன்பழகன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai