Enable Javscript for better performance
பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி: 800 மாணவர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி: 800 மாணவர்கள் பங்கேற்பு

    By புதுச்சேரி,  |   Published on : 15th October 2016 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான வட்டம்-2 அளவிலான தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை துவங்கின.
     புதுச்சேரி பள்ளி கல்வித் துறையின் விளையாட்டுத் துறை மற்றும் உழவர்கரை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வட்டம்-2 அளவிலான தடகளப்போட்டி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.
     14 வயதுக்குள்பட்டோர், 17 வயதுக்குள்பட்டோர், 19 வயதுக்குள்பட்டோர் ஆகிய 3 பிரிவுகளில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 100 மீ, 200 மீ, 400 மீ, 600 மீ, 800 மீ, 1000 மீ, 1500 மீ, 300 மீ மற்றும் 5000 மீ ஓட்டம், 100 மீ தொடர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடந்து சனிக்கிழமையும் போட்டிகள் நடக்கின்றன. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். இதற்கான ஏற்பாடுகளை உழவர்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் தமிழ்ச்செல்வி, உடற்கல்வி விரிவுரையாளர் சிவக்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.
     சேதமடைந்த உபகரணம்: தடகளப்போட்டிகளில் ஒரு பிரிவான உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவ, மாணவியர் தாண்டி குதிப்பதற்கான பஞ்சு மெத்தை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. அதில் குதிக்கும் மாணவ, மாணவியர் காயமடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே போட்டி அமைப்பாளர்கள் பழுதான பஞ்சு மெத்தையை அகற்றி விட்டு புதிய மெத்தையை தருவிக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai