Enable Javscript for better performance
புதுவைக்கு வளர்ச்சி ஆணையர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய வளர்ச்சி ஆணையர் மற்றும் அரசு செயலராக டாக்டர் ஜி.நரேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யூனியன் பிரதேசங்களுக்கான கேடரைச் (1989) சேர்ந்தவர்.
     காரைக்கால் மாவட்ட ஆட்சியர்: காரைக்கால் மாவட்ட ஆட்சியராக உள்ள பி.பார்த்திபன் இப்பொறுப்போடு கூடுதலாக புதுச்சேரி பவர் கார்ப்பரஷேன் லிட் நிறுவன மேலாண் இயக்குநராகவும் செயல்படுவார்.
     புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் பி.பிரியதர்ஷினி, அப்பொறுப்போடு கூடுதலாக உள்ளாட்சித் துறை இயக்குநர் பொறுப்பையும் தாற்காலிகமாக வகித்து வருவார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் மனோஜ் பரிதா பிறப்பித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai