Enable Javscript for better performance
மத்திய அரசிடம் கூடுதல் நிதியைப் பெறுவோம்: முதல்வர் திட்டவட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசிடம் கூடுதல் நிதியைப் பெறுவோம்: முதல்வர் திட்டவட்டம்

    By புதுச்சேரி  |   Published on : 15th October 2016 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரிக்கு கூடுதல் நிதியைப் பெறாமல் விடமாட்டோம் என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
     புதுச்சேரியை அடுத்த ஏம்பலம் கிராமத்தில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கிளை அலுவலகம் திறப்பு விழா மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வசதி வழங்கும் திட்டம், கணினி மயமாக்கப்பட்ட பால் உற்பத்தியாளர் நிலையம் திறப்பு உள்ளிட்ட முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவர் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
     அதில் முதல்வர் நாராயணசாமி பேசியது: புதுச்சேரியில் மக்களுக்கு பாதுகாப்பான சிறப்பான ஆட்சியை அரசு தருகிறது. ஆட்சிக்கு வந்த 4 மாத காலத்தில் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம், மீனவர்களுக்கு டீசல் மானியம், விவசாய கடன் ரத்து, 100 யூனிட் வரை இலவச மின்சாரம், முதியோர் மற்றும் விதவைகளுக்கு வீடு தேடி உதவித் தொகை தரும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
     படிப்படியாக பல திட்டங்களை நிறைவேற்றவும் உள்ளோம். புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசிடமிருந்து அதிகப்படியான நிதியை பெறாமல் விடமாட்டோம்.
     நிதியை பெறுவதற்காக இதுவரை நான்கு முறை மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களை சந்தித்துப் பேசியுள்ளேன். அவர்களும் தேவையான நிதியை தருவார்கள் என நம்புகிறேன்.
     புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. விரைவில் அனைத்து மாநிலத்தவரும் புதுச்சேரியை திரும்பி பார்க்கும் நிலையை உருவாக்குவோம் என்றார் நாராயணசாமி.
     சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என். தனவேலு, விஜயவேணி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai