Enable Javscript for better performance
மாணவர்கள் தினமும் சுயபரிசோதனை செய்ய வேண்டும்: கிரண்பேடி அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்கள் தினமும் சுயபரிசோதனை செய்ய வேண்டும்: கிரண்பேடி அறிவுரை

    By புதுச்சேரி,  |   Published on : 15th October 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளி, கல்லுôரி மாணவர்கள் நாள்தோறும் 5 நிமிடம் சுய பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் வகுப்பறைகளில் நேரம் ஒதுக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
     புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயன்முறை உளவியல் சார்பில் மூன்று நாள் பன்னாட்டு உளவியல் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துறைத் தலைவர் ரங்கையா வரவேற்றார். துணைவேந்தர் அனிஷா பஷீர் கான் தலைமை தாங்கினார்.
     இந்திய பள்ளி உளவியல் முன்னாள் தலைவர் தாகூர் நோக்கவுரையாற்றினார்.
     பேராசிரியர் பாஞ்ராமலிங்கத்தினால் தொகுக்கப்பட்ட பள்ளி உளவியல் குறித்த புத்தகத்தை வெளியிட்டு ஆளுநர் கிரண்பேடி பேசியதாவது:
     நான் தில்லியில் திகார் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது கைதிகளை உளவியல் ரீதியாக மாற்ற முயற்சி மேற்கொண்டேன். விபஸ்சனா போன்ற முச்சுப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. ஒரே நேரத்தில் 1,200க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் தங்களை சுய பரிசோதனை செய்தனர். தொடர் மூச்சுப் பயிற்சிலும் வெற்றிகண்டனர். கைதிகளிடம் இந்த பயிற்சி நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தியது.
     இறைவன் அனைத்தையும் நமக்கு கொடுத்துள்ளார். அதற்கு நாம் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொரு நாளும் புத்தம் புதியவை. எனவே, ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லுôரி மாணவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் வகுப்பறைகளில் ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்க வேண்டும்.
     அந்த நிமிடங்களில் அவர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளவும், திரும்பிப் பார்க்கவும் வேண்டும். இது வாழ்வியல் நெறிமுறைகளை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவும், வாழ்க்கையில் உயரவும் உதவும். புதுச்சேரி பல்கலை. கூட இந்த முயற்சியை மாணவர்களிடம் புகுத்திப் பார்க்கலாம் என்றார் கிரண்பேடி. ஒருங்கிணைப்பாளர் பாஞ்ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai