Enable Javscript for better performance
மின் கட்டண சலுகை: இம்மாதம் முதல் அமல்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர், 50 சதவீத கட்டணம் மட்டுமே செலுத்தும் நடைமுறை இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.
     புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வென்று, கடந்த ஜூன் 6ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட நாராயணசாமி, இலவச அரிசித் திட்டம் மற்றும் 100 யூனிட் வரை மின்கட்டணம் செலுத்துவோருக்கு 50 சதவீத கட்டணச் சலுகை உள்ளிட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
     இந்த நிலையில் வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 100 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு 50 சதவீத கட்டணம் செலுத்தலாம் என்று புதுச்சேரி அரசின் அரசாணை கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
     இதனைத்தொடர்ந்து, இது தொடர்பான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியான புதுச்சேரி அரசின் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai