Enable Javscript for better performance
ரெளடி வீட்டில் சோதனை: பணம், ஆவணங்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ரெளடி வீட்டில் சோதனை: பணம், ஆவணங்கள் பறிமுதல்

    By புதுச்சேரி,  |   Published on : 15th October 2016 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில், சிறையில் உள்ள ரெளடியின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி ஏராளமான பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
     புதுவையில் உள்ள தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்ட புகாரின் பேரில், சிறையில் இருந்த ரெளடி மணிகண்டன் மற்றும் ஏழுமலை, சுந்தரவதனன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் போலீஸார் நடத்திய விசாரணையில், சிறையில் உள்ள மற்றொரு பிரபல ரெளடி கர்ணாவுக்கும் இந்த மிரட்டல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
     இதனையடுத்து முதலியார்பேட்டை அனிதா நகரில் உள்ள கர்ணாவின் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு சென்ற ஒதியஞ்சாலை போலீஸார், திடீர் சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த சோதனையில் ஏராளமான பணம் மற்றும் சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து சிறையில் இருந்த கர்ணாவை ஒதியஞ்சாலை போலீஸார் மீண்டும் வியாழக்கிழமை இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai