Enable Javscript for better performance
கடற்கரையில் நாளை வாராந்திர கலைநிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கடற்கரையில் நாளை வாராந்திர கலைநிகழ்ச்சி

    By DIN  |   Published on : 22nd October 2016 05:39 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரி கலைபண்பாட்டுத் துறை, சுற்றுலா துறை சார்பில் வாராந்திர கலை விழா கடற்கரை காந்தி திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
    புதுவை சங்கீதா நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம் முதல் நிகழ்ச்சியாக நடக்கிறது. இதில் பரதக் கலைகளின் வகைகளான புஷ்பாஞ்சலி, தில்லானா, கணபதி நடனம், சிவநடனம் போன்றவை நடைபெறுகின்றன.
    புதுவை அடவுக்கலை குழுவினர் சார்பில் கிராமிய நடன நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகம், கலியல் ஆட்டம், தீ நடனம், நாட்டுப்புற நடனங்கள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் இந்நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம் என கலைபண்பாட்டுத் துறை இயக்குநர் சு.கணேசன் தெரிவித்துள்ளார்.

     

    kattana sevai