சுடச்சுட

  

  ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வாகன சேவை: எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

  By DIN  |   Published on : 04th September 2016 11:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வாகன சேவையை முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு கட்சி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
   சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசியது:
   விஜயவேணி (காங்): அனைத்து மருத்துவமனைகளிலும் ஆம்புலன்ஸ் வாகனம் வசதி வேண்டும்.
   முதல்வர் நாராயணசாமி: நடவடிக்கை எடுக்கப்படும்.
   கொறடா அனந்தராமன்: 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பழையதாகி விட்டன. புதிய வாகனங்களுடன் உதவியாளர்களையும் நியமிக்க வேண்டும். தனியார் செல்லிடப்பேசிகள் மூலம் 108 எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.
   அன்பழகன் (அதிமுக): சுகாதாரத்துக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும். அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி குறைவாக உள்ளது. அறுவை சிகிச்சை கூடத்தில் 20 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கருவிகளை கழிக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவில் இல்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் கருவிகளை விரைவில் தருவிக்க வேண்டும்.
   கீதா ஆனந்தன் (திமுக): காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வெண்டிலேட்டர் வசதி உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்க வேண்டும்.
   சிவா (திமுக): ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 60 பேரை வேலையில் வைத்துள்ளோம். எத்தனை வாகனங்கள் ஓடுகின்றன. அவற்றில் மருத்துவர்கள், உதவியாளர்களும் இல்லை. அனைத்தும் பழைய வாகனங்களாக உள்ளன. அவற்றை புதுப்பிக்க வேண்டும் ஓட்டுநர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
   தீப்பாயந்தான் (காங்): ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் 8 மணி நேரமே செயல்படுகிறது. சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. முழு நேர ஆம்புலன்ஸ் வசதி தேவை.
   அமைச்சர் கந்தசாமி: கொம்யூன் பஞ்சாயத்துகளில் தனியார் வாகனங்களை பயன்படுத்த ஏற்பாடு செய்யலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai