சுடச்சுட

  

   குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அரசே நடத்தக் கோரிக்கை

  By DIN  |   Published on : 03rd September 2016 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களே அரசே ஏற்று நடத்த வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. இரா சிவா வலியுறுத்தி உள்ளார்.
   பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசியது:
   இரா.சிவா (திமுக): சுத்திகரிப்பு நிலையங்கள் தொடக்கம் முதலே அணுகுமுறை சரியில்லை. அரசின் இடத்தில் ரூ.20 லட்சம் நிதியும் தரப்பட்டு, ஆழ்துளை கிணறும் போடப்பட்டது.
   பராமரிப்பு செய்கிறோம் என்ற பெயரில் ரூ.7 ஒரு கேன் குடிநீருக்கு வசூலிக்கின்றனர். மக்கள் பணம் ரூ.12 லட்சத்தை ஆண்டுதோறும் வீணாக செல்கிறது. 2 இடங்களில் இலவசமாக குடிநீர் தரப்படவில்லை. பாசிக் நிறுவனத்திடம் சுத்திகரிப்பு நிலையங்களை விட வேண்டும். மக்களுக்கு குடிநீரை இலவசமாக தரலாம். பில்டரை மாற்ற ரூ.1000 தான் செலவிட வேண்டும். போர் போட்டுத் தந்துள்ளோம் மாதம் ரூ.1.5 லட்சம் வசூலிக்கின்றனர்.
   அமைச்சர் நமச்சிவாயம்: உறுப்பினர் கருத்தை அரசு பரிசீலிக்கும்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai