சுடச்சுட

  

  அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
   முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளதாவது:
   தனது அளப்பரிய சேவைக்காக நோபல் பரிசும், பாரத ரத்னாவும் பெற்ற அன்னை தெரசா தற்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார். அவரை வணங்குகிறோம் என்றார் நாராயணசாமி.
   எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி: மனிதகுலத்துக்கு குறிப்பாக இந்திய நாட்டின் ஏழை, எளிய நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் அரும்சேவையாற்றிய அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஆற்றிய பணிக்காக பாரத ரத்னா விருது தரப்பட்டது. மனிதாபிமானத்தை மெச்சி நோபல் பரிசும் வழங்கப்பட்டது. வாடிகன் நகரில் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை கோடிக்கணக்கான மக்களை போல் நாமும் வரவேற்கிறோம் என்றார்.
   ராதாகிருஷ்ணன் எம்.பி.: உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா புரிந்த அற்புதங்களை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு புனிதர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
   ரோம் நகரில் உள்ள வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், அன்னை தெரசாவை புனிதராக அறிவித்து சிறப்பு செய்வதென்பது அப்பழுக்கற்ற தொண்டுக்கு மகுடம் சூட்டுவது போன்றதாகும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai