சுடச்சுட

    

     உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஏன்? மார்க்சிஸ்ட் கேள்வி

    By DIN  |   Published on : 05th September 2016 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
     விலைவாசி உயர்வு, வேலையின்மையை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், புதுச்சேரி அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை அருகே அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
     நகரக்குழுச் செயலாளர் எம்.பி.மதிவாணன் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசியது:
     புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தலைமையில் ஒரு தலைமையும், முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஒரு மையம் என இரண்டு அதிகார மையங்கள் செயல்படுவது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
     ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் குப்பைகளை வாருவதற்காகவா நியமிக்கப்பட்டார்.
     புதுச்சேரி மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்ற போதிய நிதி ஆதாரத்தை திரட்ட எந்தெந்த வழிகளை பின்பற்றுவது என ஆராயுவதை விட்டு, வீதிகளில் கிடக்கும் குப்பை கழிவுகளை
     அகற்றுகிறோம் என்பது
     மக்களை ஏமாற்றும் செயல்.
     உள்ளாட்சித் தேர்தல்
     முந்தைய ரங்கசாமி தலைமையிலான அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வரவில்லை.
     தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு சமர்ப்பித்துள்ள பட்ஜெட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் என குறிப்பிடவில்லை. ஏன் புதுச்சேரியில் நடத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் முன்வரவில்லை என்று பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
     வேலைவாய்ப்பற்ற மாநிலம்
     புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றி எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெற வில்லை. எனவே, இதே நிலை நீடித்தால் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூ. காங்கிரஸ் அரசை எதிர்த்து போராடும் என்றார் பாலகிருஷ்ணன்.
     பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் பேசினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai