சுடச்சுட

  

  புதுச்சேரியில் இருந்து கோயம்புத்தூருக்கு பிஆர்டிசி சார்பில் வோல்வோ பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்படுகிறது.
   நாள்தோறும் இரவு 10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, அவிநாசி வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு கோவை சென்றடையும். அதே போல, மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். பேருந்து குளிர்சாதன வசதியுடன் 45 பேர் அமரக்கூடியதாக இருக்கும். ஒரு வழிக்கட்டணம் ரூ.600 ஆகும். முன்பதிவுக் கட்டணம் ரூ.25.
   பேருந்து சேவை தொடக்கம்
   இப்புதிய வோல்வோ பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான், புதுச்சேரி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இரவு 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai