சுடச்சுட

  

  புதுச்சேரி கல்வித்துறை விரிவுரையாளர் மனிதநேய கவிஞர் விருது பெற்றுள்ளார்.
   சென்னை நம்மொழிப் பதிப்பகம் "மக்கள் போற்றும் மனிதநேயம்' என்ற தலைப்பில் கவிதைகளை படைப்பாளிகளிடம் இருந்து பெற்று அதனை நூலாக வெளியிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த பல கவிஞர்கள் அனுப்பிவைத்த படைப்புகளில் 76 கவிதைகள் சிறந்தவையாகத் தேர்வு செய்யப்பட்டு "மக்கள் போற்றும் மனித நேயம்' என்ற தலைப்பில் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
   இதில், புதுச்சேரி கல்வித்துறையின் மாநிலப் பயிற்சி மையத்தில் பணியாற்றும் விரிவுரையாளர் பூபதி மற்றும் இலாசுப்பேட்டை பொற்கொடி இருவருக்கும் புதுவை பகுதியில் இருந்து சிறந்த கவிதை எழுதியமைக்கான மனிதநேய கவிஞர் விருது வழங்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai