சுடச்சுட

  

  காரைக்காலில் 47 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவரும், ஸ்ரீ சக்தி விநாயகர் விழா மத்தியக் கமிட்டி அமைப்பாளருமான கே.எஸ்.விஜயன் ஞாயிற்றுக்கிழமை கூறியது :
   காரைக்கால் ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோயிலில் 24-ஆம் ஆண்டாக ஸ்ரீ சக்தி விநாயகர் 5-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்படும். இத்துடன் நகரில் மேலும் 46 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை நடத்தப்படும்.
   தொடர்ந்து 7-ஆம் தேதி புதன்கிழமை பகல் 12 மணியளவில் ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோயிலில் இருந்து விநாயகர்சிலைகள் நகர்வலம் புறப்பாடு நடக்கிறது. முன்னதாகவே எல்லா பகுதியிலும் பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இப்பகுதிக்கு வந்து வரிசைப்படுத்தப்படும். முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் ஊர்வலம் புறப்பட்டு, காரைக்கால் முக்கிய வீதிகளின் வழியே கிளிஞ்சல்மேடு கடற்கரைக்கு மாலை 6 மணியளவில் சென்றடைந்து அங்கு விஸர்ஜனம் செய்யப்படும்.
   இதுதவிர, இந்து முன்னணி சார்பில் திருமலைராயன்பட்டினம் பகுதியில 38 இடங்களில் 5-ஆம் தேதி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இவை 5, 6,7 ஆகிய தேதிகளில் பட்டினச்சேரி பகுதி கடற்கரையில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai