சுடச்சுட

  

  அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்: காங்கிரஸ் தலைவர் வரவேற்பு

  By புதுச்சேரி,  |   Published on : 06th September 2016 10:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதற்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.நமச்சிவாயம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
  அவர் வெளியிட்ட அறிக்கை: அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவி புரிவதற்காக அவதரித்த, மனிதருள் புனிதராய் திகழும், சரித்திரம் போற்றும் அன்னை
  தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது பொருத்தமானது.
  அயல் நாட்டில் பிறந்தாலும், இந்திய மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த புனித தாய் தெரசாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி பாரதம்
  பெருமைப்படுத்தியது. 
  வாழும்போதும், மறைந்த பிறகும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்வழிகாட்டும் அற்புத அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கிய போப்பாண்டவருக்கு
  எனது மனமார்ந்த நன்றி என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai