சுடச்சுட

    

    அன்னை தெரசா நினைவு நாள்: முதல்வர் உள்பட தலைவர்கள் அஞ்சலி

    By புதுச்சேரி,  |   Published on : 06th September 2016 10:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்னை தெரசாவின் நினைவு நாளையொட்டி, புதுச்சேரி பாரதி பூங்கா அருகே நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
    அன்னை தெரசாவுக்கு வாடிகன் நகரில் போப்பாண்டவர் ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் வழங்கிய நிலையில், திங்கள்கிழமை அவரது நினைவு நாளாகும்.
    அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னை தெரசாவின் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி, பேரவைத் துணைத் தலைவர் விபி.சிவக்கொழுந்து, நாடாளுமன்ற செயலாளர்
    ஏ.ஜான்குமார், செய்தித் துறை இயக்குநர் உதயகுமார் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மிஷினரிஸ் ஆப் சாரிட்டி வளாகத்திலும்
    அன்னை தெரசாவின் படத்துக்கு மாலை அணிவித்து சகோதரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai