சுடச்சுட

    

    காலாப்பட்டு துணை மின் நிலையத்தில் மின்மாற்றி வெடித்தது: 10 கிராமங்களில் மின் விநியோகம் பாதிப்பு

    By புதுச்சேரி,  |   Published on : 06th September 2016 10:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    காலாப்பட்டு துணை மின் நிலையத்தில் மின்மாற்றி வெடித்ததால் 10 கிராமங்களில் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
    காலாப்பட்டு துணை மின் நிலையம் மத்திய பல்கலைக்கழகம் பின்புறம் உள்ளது. 
    இதன்மூலம் காலாப்பட்டு, பெரியகாலாப்பட்டு, கனகசெட்டிக்குளம், பிள்ளைச்சாவடி, ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், தமிழக பகுதியான மாத்தூர், கீழ்புத்துப்பட்டு,
    கழுப்பெரும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் மின்சார வசதி பெறுகின்றன. இந்த நிலையில், துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி திடீரென வெடித்தது.
    இதுகுறித்து காலாப்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு  மின் துறையினர் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
    இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    எனினும், தீ பரவாமல் தடுக்கும் விதமாக மின்சாரம் உடனே துண்டிக்கப்பட்டது. இதனால், 10 கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மாலை வரை
    மின்சாரம் வராததால் விநாயகர் சதுர்த்தி விழாவன்று மக்கள் பாதிக்கப்பட்டனர். மின் துறை ஊழியர்கள் மீண்டும் மின் விநியோகத்தை தொடங்குவதற்கான
    பணியில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai