சுடச்சுட

  

  தவறவிட்ட ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பண மோசடி

  By காரைக்கால்,  |   Published on : 06th September 2016 10:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தவறவிட்ட ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி, மர்ம நபர் பணம் எடுத்ததாக, ஏடிஎம் அட்டைதாரர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
  ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது குடும்பத்தோடு திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். 
  அப்போது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.23,000 எடுத்ததாக செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், ஏடிஎம் அட்டையை தேடியபோது,வரும்வழியில் தவறவிட்டது தெரியவந்தது.
  இதுகுறித்து திருநள்ளாறு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai